அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலில் பாலராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் சிலை கடந்த மாதம் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி பங்கேற்ற கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, ராமா் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தா்கள் ராமா் கோயில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

ராமா் கோயிலின் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலில் பாலராமரை தரிசிக்க வரும் பக்தர்கள் வழக்கத்தைவிட அதிகமாக குவிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com