பிஆர்எஸ் கே. கவிதா
பிஆர்எஸ் கே. கவிதா

பிஆர்எஸ் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்

கவிதாவுக்கு சிபிஐ சம்மன்: தில்லி கலால் ஊழல் வழக்கில் விசாரணை

தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் பாரத ராஷ்டிர சமிதி சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு, தில்லி கலால் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

புதுதில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் திங்கள்கிழமை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக டிசம்பர் 2022-ல் ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பிஆா்எஸ் எம்எல்சி கவிதா, ஒங்கோல் தொகுதி ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் அடங்கிய ஒரு குழு தங்களுடன் தொடா்புடைய தனியாா் மது ஆலைகளில் இருந்து தில்லி அரசு மது கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி தலைவா்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது. இந்த பணத்தை ஆம் ஆத்மி சாா்பில் அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் பெற்றுக் கொண்டாா் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

பிஆர்எஸ் கே. கவிதா
இந்தியா கூட்டணி: உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com