தில்லி நோக்கி வரும் விவசாயிகளுக்காகக் காத்திருக்கும் முள்கம்பிகள், தடுப்புகள்

தில்லி நோக்கி வரும் விவசாயிகளை வரவேற்க முள்கம்பி, அகழிகள் உள்ளிட்டவை காத்திருக்கின்றன.
தில்லி நோக்கி வரும் விவசாயிகளுக்காகக் காத்திருக்கும் முள்கம்பிகள், தடுப்புகள்
Published on
Updated on
2 min read

தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகளை தடுக்க, தில்லி காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். முள்கம்பிகள், சாலைகளில் பெரிய பள்ளங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தில்லி நோக்கி பேரணியாக வந்துகொண்டிருக்கும் விவசாயிகளை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில், தில்லியின் எல்லைப் பகுதிகளில் மூள் கம்பிகளைக் கொண்ட தடுப்புகள் (தடுப்புகள் மீது ஏற முடியாமல் தடுக்க), சிமெண்ட் பாறைகள் (சாலைகளில் வாகனங்கள் வர முடியாமல் தடுக்க), ஆணிப் படுக்கைகள் (வாகனங்கள் வந்தாலும் பங்சர் ஆக), அதையும் தாண்டி சாலைகளில் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

தில்லிக்குள் விவசாயிகள் எந்த வகையிலும் நுழைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தில்லி காவல்துறை, பல்வேறு நவீன யுக்திகளைக் கையாண்டு தில்லி விவசாயிகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தில்லி நோக்கி வரும் விவசாயிகளுக்காகக் காத்திருக்கும் முள்கம்பிகள், தடுப்புகள்
நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு

விவசாயிகளின் இந்தப் போராட்டம் ஏதேனும் பெரிய அசம்பாவிதமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, அதீத தடுப்பு நடவடிக்கைகளை தில்லி காவல்துறை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வடமாநில எல்லைப் பகுதிகளான திக்ரி, சிங்கு பகுதிகளில் காவல்துறையினரும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா். பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் அங்கு முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதையொட்டி அறிவித்தபடி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் தில்லியை நோக்கி இன்று காலை மீண்டும் பேரணியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தில்லி காவல்துறையின் எந்தத் தடைகளையும் உடைத்தெறியும் வகையில், விவசாயிகளும் ஜேசிபி உள்ளிட்ட கருவிகளுடன் பேரணியாக வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com