தில்லி: அரசுப் பள்ளி நூலகத்தில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
ஆசிரியரின் மரணம்: நூலகத்தில் தொங்கிய விதி


தில்லியில் அரசுப் பள்ளி நூலகத்தில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில், சீமாபுரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வந்தவர் அசுதோஷ்(50). இவர் பள்ளி நூலகத்தில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வுக்கு பின் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் முழுவதும் நூலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விசாரணையில், மூன்று பக்க தற்கொலைக் குறிப்பை காவல்துறையினர் மீட்டனர். நிதிப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ஒருவர் பள்ளி நூலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...