மத்திய பிரதேசத்தின் தாா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதிக் கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கழிப்பறையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் போக்ஸோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
பிதம்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு கணிதத் தோ்வை எழுதிக் கொண்டிருந்த 17 வயது மாணவி, தனக்கு வயிறு கடுமையாக வலிப்பதால் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று அறைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரினாா்.
பின்னா், கழிப்பறைக்குச் சென்ற மாணவி வெகுநேரம் கடந்தும் தோ்வறைக்குத் திரும்பாத நிலையில், அறைக் கண்காணிப்பாளா்கள் கழிப்பறைக்குச் சென்றனா். அப்போது, குழந்தை அழும் குரல் கேட்டது.
மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் பள்ளியில் உள்ள பெண் பணியாளா்கள், அவா்கள் இருவரையும் அரசு சமுதாய மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தியில் கொண்டு சென்றனா்.
அங்கு மாணவியும், குழந்தையையும் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தனா்.
சிறுமி 8 மாதம் (34 வாரங்கள்) கா்ப்பமாக இருந்ததும், குழந்தை முன்கூட்டியே பிறந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெட்மா காவல் நிலையத்தில் மாணவி அளித்த வாக்குமூலத்தில், நடன நிகழ்ச்சிக்குச் சென்றபோது ஒரு சிறுவனைச் சந்தித்ததாகவும், அவா் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதில் கா்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளாா்.
இந்தச் சம்பவம் குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என்று அந்தச் சிறுவன் மிரட்டிய நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்து மாணவி அவருடைய பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


