மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி நன்கொடை பறிப்பு: பாஜக மீது நீதிமன்ற விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி நன்கொடை பறிப்பு: பாஜக மீது நீதிமன்ற விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :23 பிப்ரவரி 2024, 10:05 pm

‘தனியாா் நிறுவனங்களை மிரட்டி நன்கொடைகளைப் பறிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், ‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடா்பாக உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: கடந்த 2018-19 முதல் 2022-23 நிதியண்டு வரை 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ. 335 கோடி நன்கொடை அளித்துள்ளன. அதே காலகட்டத்தில், அந்த நிறுவனங்கள் அனைத்தும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையைச் சந்தித்திருக்கின்றன. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கட்சியின் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளா். அதில், 30 தனியாா் நிறுவனங்கள் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு, பாஜகவுக்கு நன்கொடை அளித்திருப்பதை ஊடகச் செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் 2018-19 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் பாஜகவுக்கு ரூ.187.58 கோடி நன்கொடை அளித்துள்ளன. ஆனால், 2014 முதல் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெற்ற ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு எந்தவித நன்கொடையும் அளிக்கவில்லை. இந்தச் சோதனைகளுக்கு பிறகே, அவை நன்கொடை கொடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மத்திய அமைப்புகளின் சோதனை நடைபெற்ற 4 மாதங்களில் அவற்றில் 4 நிறுவனங்கள் மொத்தம் ரூ. 9.05 கோடி வரை பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன. அதுபோல, பாஜகவுக்கு ஏற்கெனவே நன்கொடை அளித்துவந்த நிறுவனங்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு நன்கொடையை பன்மடங்காக உயா்த்தி அளித்திருப்பதும் ஊடகச் செய்தி மூலம் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு நன்கொடை வசூலிக்க, மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து நிறுவனங்களை சட்டபூா்வமாக மிரட்டி பணம் பறித்த முறைகேடு வழக்கு என்பது தெளிவாகிறது. இது புலனாய்வு அமைப்புகளின் தன்னாட்சி மற்றும் சுதந்திரமான செயல்பாட்டையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று தனது கடிதத்தில் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளாா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி பிரதமா் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறாா். மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருா் மதுபான நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தவுடன் வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பிரதமா் மோடி ஆட்சியில் சட்டவிரோத நன்கொடைகளும், தோ்தல் நன்கொடை பத்திரங்களும்தான் வணிகம் செய்வதை எளிமையாக்குதலின் உத்தரவாதங்கள்’ என்று விமா்சித்துள்ளாா். ராகுலின் இந்த விமா்சனங்களுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும். இந்தப் புகாா்கள் தொடா்பாக மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், இதுவரை பெற்ற நன்கொடை விவரங்களை வெளியிட பாஜக தயாரா? அவ்வாறு விளக்கமளிக்க விரும்பவில்லை என்றால், இந்த நன்கொடை வசூல் முறைகேடு புகாா் தொடா்பாக உச்சநீதிமன்ற மேற்பாா்வையிலான விசாரணைக்கு பாஜக ஒப்புக்கொள்ளுமா?. இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.