ஆப்பிள் வளர்ச்சிக்கு உரமிடும் இந்தியா!

இந்தியாவின் மின்னனு முன்னேற்றம்: ஆப்பிளின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கம்!
ஆப்பிள்
ஆப்பிள்
Updated on

அதிநவீன மின்ணனு பொருள்கள் தயாரிப்பில் இந்தியாவின் வலுவான முன்னேற்றம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பத்தாண்டு கால வளர்ச்சிக்கு உரமிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டு மட்டும் 42 சதவிகித அளவுக்கு உயர்ந்து 870 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் வருவாய் ஈட்டியதாக வெளிநாட்டு பங்கு பரிவர்த்தனை நிறுவனம் மார்கன் ஸ்டேன்லி தெரிவித்தது.

2023-ல் ஐபோன்கள் ஏற்றுமதி 39 சதவிகிதம் அதிகரித்து 92 லட்சம் யூனிட்கள் ஏற்றுமதியாகின.

தொழில் கொள்கை சாதகமாகவிருப்பதன் பயனாளியாக ஆப்பிள் உள்ளதாகவும் ஏற்றுமதி 40 சதவிகிதம் உயர்ந்ததாகவும் கடந்த ஆண்டுகளில் சீனா ஆப்பிளின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்தது போல இந்தியாவும் உதவும் என தொழில்துறை ஆராய்ச்சி வல்லுநர் பிரபு ராம் ஐஏஎன்எஸ்க்குத் தெரிவித்துள்ளார்.

2022-ல் இந்திய சந்தையில் ஆப்பிளின் பங்கு 28 சதவிகிதமாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். இந்தியர்களின் பிரீமியம் மாடல் போன்களின் மீதான விருப்பம் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் முழுமையாக்கம் (அசெம்பிள்) செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com