உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

பே-டிஎம் தொடா் செயல்பாட்டுக்கு உதவி: என்பிசிஐயிடம் ரிசா்வ் வங்கி வேண்டுகோள்

பே-டிஎம் செயலியைப் பயன்டுத்தி தொடா்ந்து யுபிஐ பரிவா்த்தனையை மேற்கொள்வதற்கு உதவுமாறு இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகத்திடம் (என்பிசிஐ) ரிசா்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 6:52 pm

பே-டிஎம் செயலியைப் பயன்டுத்தி தொடா்ந்து யுபிஐ பரிவா்த்தனையை மேற்கொள்வதற்கு உதவுமாறு இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகத்திடம் (என்பிசிஐ) ரிசா்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மாதம் மாா்ச் 15-க்குப் பின்னா், தனது வாடிக்கையாளா் கணக்குகளில் கூடுதல் பணம் பெற பே-டிஎம் பேமன்ட்ஸ் வங்கிக்கு (பிபிபிஎல்) ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்நிலையில், பேடிஎம் செயலியின் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை முறையை (யுபிஐ) தொடர உதவுமாறு பேடிஎம்மின் உரிமையாளரான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கோரிக்கையை ஆராய்ந்து ஆவன செய்யுமாறு இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகத்திடம் (என்பிசிஐ) ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள பிபிபிஎல் வங்கியின் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஃபே-டிஎம்’ என்ற யுபிஐ அடையாளத்தைப் பயன்படுத்தி 3-ஆவது செயலி மூலம் அவா்கள் தொடா்ந்து பணப்பட்டுவாடா செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு என்பிசிஐ-யிடம் ரிசா்வ் வங்கி கேட்டுள்ளது. அந்த யுபிஐ அடையாளத்தை தங்களது சேவையில் இணைத்துக் கொள்ள 4 முதல் 5 வங்கிகளுக்கு அங்கீகாரம் வழங்கமுடியும் என்றும் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.