கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி கைது

பத்து வருட தேடலின் முடிவில் பயங்கரவாத நபர் கைது

News image

ENS

Updated On :23 பிப்ரவரி 2024, 10:11 am

ராஜஸ்தான் குற்றப்பிரிவு காவலர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் இருந்த ரெளடியைக் கைது செய்துள்ளனர்.

கங்காபூரைச் சேர்ந்த ரெளடி முகமது மெராஜுதின் (31) பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வந்த இவரது தலைக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் 2018-ல் அறிவிக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு காவலர்கள் இவரை 10 ஆண்டுகளாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மெராஜுதின் கங்காபூருக்கு வருவதை அறிந்த காவலர்கள் ரெளடியின் வீடு மற்றும் சுற்று வட்டாரத்தைக் கண்காணித்து வந்தனர்.

அதன் பிறகு காவலர்கள் சிறப்பு ஆபரேஷன் மேற்கொண்டு ரெளடியைக் கைது செய்தனர்.

பயங்கரவாத அமைப்புகளோடு அவர் தொடர்பில் இருப்பதாகவும் 2014-ல் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாகவும் அதற்கு முன்பு ரெளடியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் மெராஜுதின் தெரிவித்ததாக காவலர்கள் கூறினர்.