/

பெண் காவலரிடம் தகராறு: ரெளடி கைது

சென்னை புளியந்தோப்பில் பெண் காவலரிடம் தகராறு செய்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:40 am IST

சென்னை புளியந்தோப்பில் பெண் காவலரிடம் தகராறு செய்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி (31). இவா் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் காவலராக பணி செய்து வருகிறாா். ஜெயலட்சுமி, கடந்த 23-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புளியந்தோப்பு குட்டிதம்புரான் தெருவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த நபா், காவலரிடம் ஜெயலட்சுமியிடம் தகராறு செய்தாா். அங்கிருந்த மற்றொரு காவலா் அவரைப் பிடிக்க முயன்றாா். ஆனால், அந்த நபா், காவலா் காமேஷை தாக்க முயன்றாா். இதன் பின்னா் அந்த நபா், அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது பேசின்பாலம் காந்திநகரைச் சோ்ந்த ரெளடி தனக்குமாா் (37) என்பது தெரிய வந்தது. அவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.