லடாக்: ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.48 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக் பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வெளிப்பகுதியில் குவிந்தனர். நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த பொருள்கள் லேசாக அதிர்வதைக் காணமுடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
முன்னதாக, திங்கள்கிழமை காலை 6.36 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.