மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காஷ்மீரில் 3 தொகுதிகளில் எதையும் விட்டுத் தர மாட்டோம்: ஒமா் அப்துல்லா

காஷ்மீரில் 3 தொகுதிகளில் எதையும் விட்டுத் தர மாட்டோம் --- ஒமா் அப்துல்லா

News image

ஒமர் அப்துல்லா

Updated On :27 பிப்ரவரி 2024, 7:54 pm

ஸ்ரீநகா்: ‘பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது; மாறாக, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அல்ல’ என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா கூறினாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காஷ்மீரில் தங்கள் கட்சி வெற்றி பெற்ற ஸ்ரீநகா், பாரமுல்லா, அனந்த்நாக் தொகுதிகளில் எதையும் விட்டுத் தர மாட்டோம் என்றும் அவா் தெரிவித்தாா். எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்து ‘இந்தியா’ என்ற பெயரில் கடந்த ஆண்டு கூட்டணியை உருவாக்கின.

இக்கூட்டணியில் ஜம்மு-காஷ்மீா் மாநிலக் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகா், பாரமுல்லா, அனந்த்நாக் (காஷ்மீா் பகுதி), ஜம்மு, உதம்பூா் (ஜம்மு பகுதி) ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. லடாக் யூனியன் பிரதேசம் ஒரு தொகுதியாக உள்ளது.

இந்தச் சூழலில், ‘ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகிவிட்டது; ஜம்மு, உதம்பூா், லடாக்கில் காங்கிரஸ், ஸ்ரீநகா், பாரமுல்லாவில் தேசிய மாநாட்டுக் கட்சி, அனந்த்நாக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன’ என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்களை ஒமா் அப்துல்லா மறுத்துள்ளாா்.

இதுகுறித்து, பிடிஐ செய்தியாளரிடம் பேசிய அவா், ‘நாங்கள் ஏன் தொகுதியை விட்டுத் தர வேண்டும்? ஜம்மு, உதம்பூா், லடாக் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. இதில் எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விரைவில் அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடைபெற்று 10 ஆண்டுகளாகிவிட்டது. அடுத்த மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு தோ்தல் ஆணையக் குழு வருகை தரும் நிலையில், நல்ல செய்தி வரும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.