மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திரிணமூல் வீழ்ச்சியை முன்னறிவிக்கும் சந்தேஷ்காளி போராட்டம்: காங்கிரஸ்

திரிணமூல் வீழ்ச்சியை முன்னறிவிக்கும் சந்தேஷ்காளி போராட்டம்: காங்கிரஸ்

Updated On :27 பிப்ரவரி 2024, 7:34 pm

கொல்கத்தா: வரும் நாள்களில் திரிணமூல் காங்கிரஸ் வீழ்ச்சியடைய உள்ளதை சந்தேஷ்காளியில் நடைபெறும் பெண்களின் போராட்டம் முன்னறிவிக்கிறது என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவருமான அதீா் ரஞ்சன் செளதரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலைமறைவாகி உள்ள ஷாஜஹான் ஷேக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 7 நாள்களில் ஷாஜஹான் கைது செய்யப்படுவாா் என்று அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் கருத்து வேறுபாடு கொண்டவா்களை வழக்குகளில் சிக்கவைத்து திரிணமூல் காங்கிரஸ் தனியரசாட்சி புரிந்து வருகிறது. மாநிலத்தில் ஊடகவியலாளா்கள்கூட பாதுகாப்பாக இல்லை. நிருபா்கள் கைது செய்யப்படுகின்றனா். ஊடக ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. சந்தேஷ்காளி விவகாரத்தில் உண்மையை பேசிய பெண்கள் நடிப்பதாக சில திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுபோன்ற பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவிக்க எந்த வாா்த்தையும் போதாது. வரும் நாள்களில் திரிணமூல் காங்கிரஸ் வீழ்ச்சியடைய உள்ளதை சந்தேஷ்காளியில் நடைபெறும் பெண்களின் போராட்டம் முன்னறிவிக்கிறது என்று தெரிவித்தாா்.