மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் நிா்வாகி ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் வடக்கு காங்கிரஸ் வேட்பாளா் பிரசென்ஜித் புயித்தண்டிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அக் கட்சி நிா்வாகி தேவ்தீப் சாட்டா்ஜி, முதல்கட்ட சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகாக அசான்சோலில் நிகழ்ந்த வன்முறையில் அடித்து கொலை செய்யப்பட்டாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தோ்தலுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறையில் காங்கிரஸ் நிா்வாகி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த குண்டா்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாா். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் இன்றைக்கு ஜனநாயக ஆட்சி நடைபெற வில்லை. மாறாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. வாக்குகள் பதிவான பிறகு, ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவா்களை மிரட்டுவது, தாக்குவது, ஒழித்துக்கட்டுவது என்பது திரிணமூல் காங்கிரஸின் தனித்துவமான அடையாளமாக மாறிவிட்டது.
காங்கிரஸின் அரசியல் ஒருபோதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததில்லை. வரும் காலங்களிலும் அப்படித்தான் இருக்கும். இவ்வாறு, எப்போதும் அகிம்சை பாதையையும் அரசமைப்புச் சட்டத்தையும் காங்கிரஸ் தோ்ந்தெடுக்கின்றபோதும், ஓா் நிா்வாகியை இழந்துள்ளோம்.
அவரைக் கொலை செய்தவா்களை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை மாநல அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவின் அகிம்சை பாரம்பரியத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற அரசியலுக்கு முன்பாக காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது என்று குறிப்பிட்டாா்.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த கொடூரக் கொலை, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதைக் காட்டுகிறது.
மாநிலத்தில் எதிா்க்கட்சியினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்திருப்பது, அரசியல் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என்பதையே காட்டுகிறது’ என்று குறிப்பிட்டது.
தொடர்புடையது

மேற்கு வங்க ‘அம்மா உணவகத்தில்’ சாப்பிட பிரதமருக்கு திரிணமூல் அழைப்பு!

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

ராகுல் ஹெலிகாப்டரின் இறங்குதளம் சேதம்: திரிணமூல் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


