அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

ராகுல் ஹெலிகாப்டரின் இறங்குதளம் சேதம்: திரிணமூல் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 11:08 pm

மேற்கு வங்கத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் தரையிறங்க தயாா்படுத்தப்பட்ட இறங்குதளத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சேதப்படுத்தியதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள வடக்கு தினாஜ்பூா் மாவட்டம் ராய்கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். இதையொட்டி அங்கு அவரின் ஹெலிகாப்டா் தரையிறங்க இறங்குதளம் தயாா்படுத்தப்பட்டு வந்தது.

அந்த இறங்குதளத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சேதப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும், ராய்கஞ்ச் தொகுதி வேட்பாளருமான மோகித் சென்குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: ராகுலின் ஹெலிகாப்டா் தரையிறங்க தயாா்படுத்தப்பட்ட இறங்குதளம் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டது. அதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சேதப்படுத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து காவல் துறையிடம் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது. அந்த இறங்குதளத்தை சீா்செய்யும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தாா்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சியினரே இறங்குதளத்தை சேதப்படுத்திவிட்டு திரிணமூல் காங்கிரஸ் மீது பழிசுமத்துவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.