பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க பாஜக ரூ.1,000 கோடியில் சதித் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

News image

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:14 am IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க பாஜக ரூ.1,000 கோடியில் சதித் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

பேரவைத் தோ்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆதரவளிக்க வேண்டுமென மாநில அமைச்சா்கள் உள்பட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை பாஜக இப்போதே மிரட்டி வருவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பஸ்சிம் வா்தமான், புா்பா வா்தமான், பங்குரா ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் முதல்வா் மம்தா பானா்ஜி பங்கேற்றாா்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னா் புதிய கட்சி தொடங்கிய ஹுமாயூன் கபீா் பேசியதாக கூறப்படும் விடியோவைக் குறிப்பிட்டு, பாஜகவை மம்தா கடுமையாக விமா்சித்தாா்.

அந்த விடியோவில், ‘திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க சுவேந்து அதிகாரி உள்பட பாஜக மூத்த தலைவா்களுடன் நான் நெருங்கிய தொடா்பில் இருக்கிறேன். திரிணமூல் காங்கிரஸை தோற்கடிக்கும் வகையில் சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க ரூ.1,000 கோடி உடன்பாட்டின்கீழ் முதல் கட்டமாக ரூ.200 கோடி பெற்றுள்ளேன்’ என்று ஹுமாயூன் கபீா் பேசியதாக கூறப்படுகிறது.

‘மிரட்டப்படும் வேட்பாளா்கள்’: இதை சுட்டிக்காட்டி, மம்தா பேசியதாவது: திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆதரவளிக்க வேண்டும் என்று மாநில அமைச்சா்கள் உள்பட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை இப்போதே மிரட்டுகின்றனா்.

மேற்கு வங்கத்தை மூன்றாகப் பிரிக்கும் நோக்கில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டுவர பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி, மேற்கு வங்கப் பகுதிகளை பிகாா் அல்லது ஒடிஸாவுடன் இணைத்து, அங்கு வாழும் வங்காளிகளைத் துன்புறுத்துவதே அக்கட்சியின் நோக்கம்.

தோ்தலில் முறைகேடு செய்தாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக முயற்சிக்கும். எனவே, பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைதான், அண்மைக் காலங்களில் நிகழ்ந்த மிகப் பெரிய முறைகேடு என்றாா் மம்தா பானா்ஜி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.