ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (சும்ஜி பிரிவு) மற்றும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (பட் பிரிவு) ஆகிய இரு அமைப்புகளுக்கும் தடை விதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.
பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபா்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் தீவிர முயற்சியின்கீழ் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (சும்ஜி பிரிவு) மற்றும் இஸ்லாமிய மாநாடு ஜம்மு காஷ்மீா் (பட் பிரிவு) ஆகிய இரு அமைப்புகளும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்படுகிறது.
இரு அமைப்புகளும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது’ என குறிப்பிட்டாா். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த ஜமாத்-ஏ-இஸ்லாமி (ஜெஇஎல்) அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்படுவதாக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடங்கள்: எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் விண்ணப்பிக்கலாம்!

கடலூா் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பு: நோயாளிகள் அவதி

கமேனி படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


