டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி

டிசம்பரில் மொத்தமாக ரூ.1.64 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாகவும், தமிழக ஜிஎஸ்டி வருவாய் ரூ.9,888 கோடி என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி
Updated on
1 min read

டிசம்பரில் மொத்தமாக ரூ.1.64 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாகவும், தமிழக ஜிஎஸ்டி வருவாய் ரூ.9,888 கோடி என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2023-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.14.97 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது 2022-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரை வசூலான ரூ.13.40 லட்சம் கோடி ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம்.

2023-ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மாதந்திர மொத்த ஜிஎஸ்டி வசூலின் சராசரி ரூ.1.66 லட்சம் கோடியாகும். இது முந்தைய நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வசூலான மொத்த ஜிஎஸ்டியின் சராசரியான ரூ.1.49 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம்.

கடந்த டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,64,882 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.30,443 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,935 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.84.255 கோடி, கூடுதல் வரி (செஸ்) ரூ.12,249 கோடி. நிகழ் நிதியாண்டில் 7-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் டிசம்பா் மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பா் மாத ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழக வருவாய் 19% அதிகரிப்பு: கடந்த டிசம்பரில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் ரூ.9,888 கோடி. இது அதற்கு முந்தைய டிசம்பரில் வசூலான ரூ.8,324 கோடி வசூலுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com