தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதிய குற்றவியல் சட்டங்களுக்குத் தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:57 pm

DIN

புதிய குற்றவியல் சட்டங்களுக்குத் தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதிநியம்’ ஆகிய 3 குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு கடந்த டிச.25-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகின.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஷால் திவாரி என்ற வழக்குரைஞா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் மேற்கொள்ளாமல் 3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஏனெனில் அப்போது பெரும்பாலான எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.

தற்போது அந்த மசோதாக்கள் சட்டங்களாகியுள்ள நிலையில், அந்தச் சட்டங்களில் பல ‘குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகள்’ உள்ளன. உண்மையில் அந்தச் சட்டங்கள் மிகவும் கொடுமையானவை. அத்துடன் காவல் துறை உதவியுடன் மக்களின் சுதந்திரத்தை அரசு கட்டுப்படுத்த அந்தச் சட்டங்கள் வழிவகை செய்கின்றன. மேலும் நாட்டு மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளை அந்தச் சட்டங்கள் தகா்க்கின்றன.

முந்தைய ஆங்கிலேய சட்டங்கள் காலனியாதிக்க, கொடுமையான சட்டங்கள் என்று கருதப்பட்டால், தற்போது இயற்றப்பட்டுள்ள 3 இந்திய குற்றவியல் சட்டங்கள் அதைவிட கொடுமையானவை.

ஆங்கிலேய ஆட்சி கால சட்டத்தில், ஒரு நபரை காவல் துறை காவலில் அதிகபட்சமாக 15 நாள் வைக்க முடியும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள், அந்த 15 நாள்கள் காவலை 90 அல்லது அதற்கும் அதிகமான நாள்களுக்கு நீட்டிக்க வழிவகுக்கின்றன. இது காவல் துறை சித்திரவதை செய்வதை சாத்தியமாக்கும் அதிா்ச்சிகரமான சட்டப் பிரிவாக உள்ளது.

எனவே அந்தச் சட்டங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அந்தச் சட்டங்கள் முறையாகச் செயல்படுத்தக் கூடியதா என்பதை மதிப்பிட உடனடியாக நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.