வடமாநிலங்களில் நடைபெற்றுவந்த லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்கலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அகில இந்திய மோட்டாா் வாகன கூட்டமைப்பினருடன் மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டால், ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் உறுதியளித்தார்.
லாரி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சரக்கு லாரியுடன் டேங்கர் லாரி ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்மாநிலங்களிலும் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா எனப் பெயர்மாற்றம் செய்தது.
இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் ஹிட் & ரன் எனப்படும் விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. இதற்கு முன்பு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர்.
எரிபொருள் விநியோகிக்கும் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெட்ரோல், டீசலுக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


