புதுதில்லி: ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை நேரில் ஆலோசித்துள்ளனர்.
புதுதில்லியில் கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் தொகுதி பங்கீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கிடையே, தில்லி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கேஜரிவாலும் முன்வைத்ததற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க | கேஜரிவால் இன்று கைது? வீட்டுக்கு வெளியே போலீஸ் குவிப்பு
இந்த நிலையில், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து காணொலி வாயிலாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! இந்தியா வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை!

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

