மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமேசானின் 2024 'குடியரசு தின சலுகை விற்பனை விழா' துவங்குகிறது!

அமேசான் நிறுவனம் 'இந்திய குடியரசுதின சலுகை விற்பனை விழா 2024' (The Great Republic Day Sale 2024) குறித்த அறிவிப்புகளை இணையத்தில் பகிர்ந்துள்ளது. 

News image
Updated On :6 ஜனவரி 2024, 3:08 pm

அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தையொட்டி புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. செல்போன்கள், லேப்டாப்கள் போன்ற மின்சாதனப் பொருள்களில் அதிகமான சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சலுகை விற்பனைகள் குறித்த தகவல்களை இணையத்தில் அமேசான் பகிர்ந்துள்ளது. 

வெளியிடப்பட்ட தகவலின்படி ஆன்டிராய்டு போன்களுக்கு 45 சதவீதம் சலுகை விலை அளிக்கப்படுகின்றன. லேப்டாப்களுக்கு 75 சதவீதம் சலுகை விலை அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வங்கிகளுக்கான சலுகைகளும் இதில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கம் போல அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது. 

சலுகைகள் துவங்கும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்த குடியரசு தின சலுகை விற்பனை விழா ஜனவரி 15 துவங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.