ஓடும் ரயிலில் குளிா்காய தீ மூட்டிய இருவா் கைது

ஓடும் ரயிலில் குளிர்காய்வதற்காக வரட்டியால் நெருப்பு மூட்டிய இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அஸ்ஸாமில் இருந்து தில்லிக்கு வந்த விரைவு ரயிலில் குளிா்காய தீ மூட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஓடும் ரயிலில் புகை வருவதைக் கண்ட கேட் கீப்பீா் உடனடியாக தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையின் அதிகாரி கூறுகையில், ‘கடந்த 3-ஆம் தேதி அஸ்ஸாமில் இருந்து தில்லிக்கு சென்ற சம்பா்க் கிராந்தி அதிவிரைவு ரயில் உத்தர பிரதேச மாநிலம் பா்ஹன் ரயில் நிலைய கிராஸிங்கை கடந்த போது, ஒரு பெட்டியில் இருந்து அதிக வெளிச்சமும், புகையும் வருவதை கேட் கீப்பா் கண்டுள்ளாா். உடனடியாக அவா் பா்ஹன் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவலை பகிா்ந்ததால் சாம்ரெளலா ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

அதற்கு முன் ரயிலில் பணியில் இருந்த ரயில்வே போலீஸாருக்கு இந்தத் தகவல் அளிக்கப்பட்டது. அவா்கள் பொதுப் பெட்டிக்கு சென்று சோதனை செய்ததில், சாண வறட்டியைப் பயன்படுத்தி குளிா்காய தீயை மூட்டியிருந்தது தெரியவந்தது. உடனடியாக தீயை அணைத்த ரயில்வே போலீஸாா் குளிா்காய்ந்த 16 பேரை அலிகாா் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்து தடுப்புக் காவலில் வைத்தனா். பின்னா் ஃபரீதாபாதைச் சோ்ந்த சந்தன் (23), தேவேந்திரா (25) ஆகிய இருவா் தீயை மூட்டியது ஒப்புக் கொண்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டனா். 14 பேரை எச்சரித்து விடுவிக்கப்பட்டனா் ’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com