அலமட்டி அணையில் இருந்து பாசனத்திற்கு 2.75 டிஎம்சி தண்ணீர் திறப்பு! 

அலமட்டி அணையில் இருந்து 2.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
அலமட்டி அணையில் இருந்து பாசனத்திற்கு 2.75 டிஎம்சி தண்ணீர் திறப்பு! 

பெங்களூரு (கர்நாடகா): கிருஷ்ணா படுகையில் (பாகல்கோட், கல்புர்கி மற்றும் விஜயபுரா) விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், அலமட்டி அணையில் இருந்து 2.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

கிருஷ்ணா படுகையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், கிருஷ்ணா மேட்டு நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய்ப் பயிர்கள் போதிய நீர் வசதியில்லாமல் காய்ந்து வரும் பயிர்களைப் பாதுகாப்பது, வரும் கோடை காலத்திற்கு போதுமான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், "குறிப்பாக, கிருஷ்ணா மேல்நிலைத் திட்டத்தில் உள்ள பெரிய நீர்த்தேக்கங்களான, அலமட்டி, நாராயணபுரா உள்ளிட்டவை, கடந்த ஆண்டு இதே காலத்தை விட, தற்போது, 50 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இருப்பு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. 

வரவிருக்கும் கோடை காலத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மற்றும் கால்நடைகளுக்கான நீர் ஆதாரங்களை பாதுகாப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று, அலமட்டி அணையில் இருந்து உடனடியாக 2.75 டிஎம்சி தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், கிருஷ்ணா படுகையில் (பாகல்கோட், கல்புர்கி மற்றும் விஜயபுரா) விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், அலமட்டி அணையில் இருந்து 2.75 டிஎம்சி தண்ணீரை ஞாயிற்றுக்கிழமை கர்நாடகா மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் திறந்து வைத்தார்.

அச்சுகட்டு பகுதி விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறும் நீர்வினியோகப் பணியில் நீர் வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

நீர் பயன்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து மேற்பார்வையிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com