ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேற்கு வங்கம் குறித்து விமர்சிப்பவர்கள்...: மம்தா பானர்ஜி

அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :8 ஜனவரி 2024, 11:33 am

DIN

நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக கொல்கத்தா பல வருடங்களாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் இடம்பெற்றுவருவதைக் குறிப்பிட்டு மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இது குறித்து மம்தா பேசும்போது,  “என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால் மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்கும்படி நடந்துகொண்டால் நான் எதிர்ப்பேன். மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்க முயல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஷேக்கின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூவரைத் தாக்கி அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியது தொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.

ஷாஜஹானுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மாநிலத்தின் பொது விநியோகத் துறையில் ஊழல் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.