முதல்வர் ஷிண்டே மற்றும் பேரவைத் தலைவர் சந்திப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

சிவசேனை எம்எல்ஏக்கள் தகுதி நீக்க மனுக்கள் மீதான தீர்ப்புக்கு முன்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று (திங்கள்கிழமை) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது: “தகுதி நீக்க விவகாரம் குறித்து பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர் ஜனவரி 10ம் தேதி மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளார்.

இந்நிலையில் அவர் குற்றம் சாட்டப்பட்டவரைச் சந்திக்கப் போகிறார் என்றால், அவரிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது?” என்று கேள்வி எழுப்பினார். 

முன்னதாக, ராகுல் நர்வேகர் ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தார். கடந்த ஆண்டு அக்டோபரிலும் இருவரும் சந்தித்தனர்.

ஜூன் 2022 இல், ஏக்நாத் ஷிண்டே மற்றும் பல எம்.எல்.ஏ.க்கள் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர், இது சிவசேனை கட்சியில் பிளவுக்கு வழிவகுத்தது மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவினரால் மற்றவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com