மகனைக் கொன்ற இளம்பெண் தொழிலதிபர்: காட்டிக்கொடுத்த ரத்தக் கரை

தனியார் நிறுவனத் தலைமை நிர்வாகியாக இருந்து வரும் சுசானா சேத், தனது 4 வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகனைக் கொன்ற இளம்பெண் தொழிலதிபர்: காட்டிக்கொடுத்த ரத்தக் கரை

தனியார் ஏஐ ஆய்வுக்கூட நிறுவனத் தலைமை நிர்வாகியாக இருந்து வரும் சுசானா சேத், தனது 4 வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவாவில், மகனைக் கொன்று, உடலுடன் கர்நாடகத்துக்குத் தப்பிச் செல்லும்போது, கோவா காவல்துறையினரால் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகனைக் கொன்றதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் செய்தியாளர்களிடம் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி, சுசானா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் சுசானாவிடமிருந்து பிரிந்து இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். சுசானா தனது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

இவர், ஜனவரி 6ஆம் தேதி கோவாவில் தனது மகனுடன் விடுதி அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். ஒரு சில நாள்கள் தங்கியிருந்த அவர் பெங்களூரு செல்ல வாடகைக் கார் கேட்டிருக்கிறார். ஜனவரி 8ஆம் தேதி அதிகாலை அவர் காரில் பெங்களூரு புறப்படுகிறார். ஆனால் அவருடன் மகன் செல்லவில்லை. பிறகு, அவர் தங்கியிருந்த அறையை ஊழியர்கள் சுத்தம் செயத் போது, அங்கிருந்த ஆடையில் ரத்தம் படிந்திருக்கிறது. உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதும், சுசானாவிடம் தொலைபேசி வாயிலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மகன் உடன் செல்லாதது குறித்து கேட்டதற்கு, தனது நண்பருடன் அவர் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார். பிறகு விசாரணையில் அவர் அளித்த முகவரி போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

கோவா காவல்துறையினர் உடனடியாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா காவல்துறையின் உதவியை நாடுகிறார்கள். கார் ஓட்டுநரின் உதவியோடு அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு வருகிறார்கள். அவரை பரிசோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் மகனின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஜாகர்த்தாவில் இருக்கும் சுசானாவின் கணவர் வெங்கட் ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சுசானாவைக் கோவா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com