காங்கிரஸ் நடைப்பயணத்திற்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுப்பு!

காங்கிரஸின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை அரண்மனை மைதானத்தில் துவங்க மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது. 
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)

காங்கிரஸின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் துவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. 

பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் துவங்குவதில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் வேறெந்த பகுதியிலும் நடை பயணத்தைத் துவங்க அனுமதி அளிக்குமாறு மணிப்பூர் அரசைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏஐசிசி தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே சி வேனுகோபால் ஆகியோர் நியாய யாத்திரைக்கான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வலைதளத்தை துவக்கிவைத்தனர்.  

இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் துவங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், மணிப்பூரின் மற்ற இடங்கள் எதிலும் யாத்திரையைத் துவங்க அனுமதி கோரியிருப்பதாகவும் வேனுகோபால் தெரிவித்துள்ளார். 

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாரத் ஜோடோ நியாய யாத்திரை வரும் ஜனவரி 14ஆம் நாள் துவங்கவுள்ளது. 6,713 கிலோமீட்டர்களை நடைப்பயணம் மற்றும் பேருந்து மூலம் பூர்த்திசெய்யும் இந்த யாத்திரை, 110 மாவட்டங்களைக் காணவிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com