நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரத்தில் நாளை திறந்துவைக்கிறார்.


நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரத்தில் நாளை திறந்துவைக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, தற்போது அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் சேது கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அடைந்துள்ளது. உலகின் மிக நீளமான கடல் பாலமாகவும், இந்தியாவின் மிக நீளமான பாலமாகவும் இது கருதப்படுகிறது.
இது மும்பை சர்வதேச விமான நிலையம், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். மும்பையிலிருந்து புணே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்குப் பயண நேரத்தைக் குறைக்கும். மேலும், மும்பை துறைமுகத்திற்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவி மும்பையில் நடைபெறும் பொதுத் திட்டத்தில் ரூ.12,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...