ராமர் கோயில் திறப்பு விழா ஆன்மீக நிகழ்வாக இல்லாமல் அரசியல் நிகழ்வாக நடத்தப்படுகிறது: சித்தராமையா

ராமர் கோயில் திறப்பு விழா ஆன்மீக நிகழ்வாக இல்லாமல், அரசியல் நிகழ்ச்சி போல நடத்தப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
சித்தராமையா (கோப்புப்படம்)
சித்தராமையா (கோப்புப்படம்)

ராமர் கோயில் திறப்பு விழா ஆன்மீக நிகழ்வாக இல்லாமல், அரசியல் நிகழ்ச்சி போல நடத்தப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்ட தலைவர்களுக்கு விடப்பட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்துள்ள நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறினார். 

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்ற காங்கிரஸ் தலைவர்களின் முடிவு மிகவும் சரியானது. அந்த முடிவை நான் ஆதரிக்கிறேன். 

ஒரு ஆன்மீக நிகழ்வை அரசியல் நிகழ்ச்சியாக்குவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சங்க பரிவாரங்களின் தலைவர்கள் கடவுள் ராமரையும், 140 கோடி இந்திய மக்களையும் அவமதித்து வருகின்றனர். 

ஆன்மீக நிகழ்ச்சி என்பது ஜாதி, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பக்தியுடன் நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு கட்சி நிகழ்ச்சியைப் போல உள்ளது.

இன்னமும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு திறப்பு விழா நடத்துவதில் அவர்களின் ஹிந்துத்துவ அரசியல் வெளிவருகிறது. இந்த விழாவை ஒரு அரசியல் பிரச்சார நிகழ்வாக மாற்றுவதன் மூலம் அனைத்து ஹிந்து மக்களுக்கும் பாஜக துரோகமிழைக்கிறது.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com