ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ராகுல் காந்தியின் 2-ம் கட்ட நடைப்பயணம் மணிப்பூரில் நாளை தொடக்கம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மணிப்பூரில் நாளை தொடங்குகிறது. 

News image
கோப்புப் படம்.
Updated On :13 ஜனவரி 2024, 4:39 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மணிப்பூரில் நாளை தொடங்குகிறது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மணிப்பூரில் நாளை தொடங்கி பேருந்து பயணம் மற்றும் நடைப்பயணமாக 66 நாள்கள் 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மாா்ச் 20-ஆம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. 

இந்த நடைப்பயணத்தை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு இம்பாலுக்கு வருகை தரும் ராகுல் காந்தி முதலில் கோங்ஜோம் போர் நினைவிடத்திற்கு செல்கிறார். 

பின்னர் தௌபால் மாவட்டத்தில் இருந்து அவர் தனது நடைப்பயணத்தை தொடங்குகிறார். அடுத்த 11 நாள்களுக்கு நடைப்பயணம் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.