ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கர்நாடகம்: கார் விபத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ பசவராஜ் மட்டிமுட்டின் கார் கவிழ்ந்ததில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

News image
Updated On :14 ஜனவரி 2024, 9:41 am

DIN

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ பசவராஜ் மட்டிமுட்டின் கார் கவிழ்ந்ததில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதி பாஜக எம்எல்ஏ பசவராஜ் மட்டிமுட். இவர், வேறு சில தலைவர்களுடன் ஷஹாபாத்தை நோக்கி இன்று காரில் சென்றுகொண்டிருந்தார்.

பலா கிராமம் அருகே இவருடைய கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக எம்.எல்.ஏ.வுக்கும் மற்றவர்களுக்கும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. காயமடைந்த எம்எல்ஏ உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.