தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வெள்ளை மாளிகையில் மெஸ்ஸி..! இன்டர் மியாமி அணியினரைச் சந்தித்த டிரம்ப்!

எம்எல்எஸ் கோப்பை வென்ற இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் சந்தித்தது குறித்து...

President Donald Trump poses for a photo as head coach Javier Mascherano, Lionel Messi and Inter Miami CF owner Jorge Mas Santos present gifts at an event to honor the 2025 Major League Soccer champions Inter Miami CF in the East Room of the White House, Thursday, March 5, 2026, in Washington. (AP Photo/Alex Brandon)

இன்டர் மியாமி அணியினரைச் சந்தித்த டிரம்ப். - படம்: ஏபி

Published On :6 மார்ச் 2026, 11:11 am IST

எம்எல்எஸ் கோப்பை வென்ற இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை கடந்த சீசனில் வென்றது.

அமெரிக்காவில் எம்எல்எஸ் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அமெரிக்காவில் இருந்து 27 அணிகளும் கனடாவில் இருந்து 3 அணிகளுமாக 30 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த 2023 சீசன் பாதியில் இன்டர் மியாமியில் இணைந்த மெஸ்ஸி 2025 சீசனில் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இரண்டாவது முறையாக, மெஸ்ஸி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி எதுவும் பேசவில்லை. அதிபர் டிரம்ப், அரசியல் நிகழ்வுகள், ஈரான் போர், வெனிசுவேலா, கியூபா, வரி விதிப்புகள் குறித்து பேசினார்.

இந்தக் கொண்டாட்டத்தில் லியோனல் மெஸ்ஸி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் (இளஞ்சிவப்பு) நிற கால்பந்தினை பரிசாக அளித்தார்.

இளஞ்சிவப்பு நிறம் இன்டர் மியாமி அணியின் வண்ணமாக இருக்கிறது. மேலும், டிரம்ப்பிற்கு எண் 47 கொண்ட ஜெர்ஸியை பரிசாக அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மெஸ்ஸியைப் புகழ்ந்து பேசிய டிரம்ப் தனது மகனும் தீவிர ரசிகன் என்று இங்கு வர அடம்பிடித்ததாகவும் வேலை அதிகமாக இருப்பதால் வேண்டாம் என தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

கடந்த 2025ல் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த விருது விழாவில் மெஸ்ஸி பங்கேற்க தவறியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Lionel Messi bestowed President Donald Trump with a bejeweled pink soccer ball during a White House ceremony honouring Inter Miami for winning last year's MLS Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.