அயோத்தி ராமர் நிவேதனம்: 56 வகையான ஆக்ரா பேட்டா!

ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அயோத்தி ராமர் நிவேதனம்: 56 வகையான ஆக்ரா பேட்டா!

56 வகையான புகழ்பெற்ற ஆக்ராவின் பேட்டா இனிப்பு வகைகள் செவ்வாய்கிழமை அயோத்தி ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது.

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்களிக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பஞ்சி பேட்டா நிறுவனத்தில் இருந்து 560 கிலோ அளவுக்கான பேட்டா இனிப்புகள் வந்தடைந்துள்ளது. அவை மட்டுமில்லாமல் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட ஆடை, வெள்ளி தட்டு மற்றும் பூஜை பொருள்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தடைந்துள்ளன.

ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் முன்னிலையில் இந்த அளிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com