ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்.. ஜனவரி 31ஆம் தேதியே கடைசி

ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ)  கொண்டுவந்துள்ளது. சுங்கக் கட்டண வசூல் முறையை எளிதாக்க இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது.
ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்.. ஜனவரி 31ஆம் தேதியே கடைசி
Published on
Updated on
1 min read

ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ)  கொண்டுவந்துள்ளது. சுங்கக் கட்டண வசூல் முறையை எளிதாக்க இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் எண்களுக்கான கேஒய்சி படிவத்தை ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால், அந்த ஃபாஸ்டேக் எண் காலாவதியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இதுவரை ஃபாஸ்டேக் எண்ணுடன் கேஒய்சி முறையை பூர்த்தி செய்யாவிட்டால், ஐஎச்எம்சிஎல் வாடிக்கையாளர் இணையதளத்துக்குச் சென்று டேஷ்போர்டு மெனுவில் சென்று கேஒய்சியை பூர்த்தி செய்யலாம்.

இதன்மூலம், ஒரே ஃபாஸ்டேக் எண்ணை பலரும் பல வாகனங்களுக்குப் பயன்படுத்தும் நடைமுறை தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே கேஒய்சி-யை ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யாவிடில், அந்த ஃபாஸ்டேக் எண் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமான சுங்கக் கட்டண வசூல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘ஃபாஸ்டேக்’ என்ற முறையைப் பயன்படுத்தி ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் தாமாக கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திராமல் பயணத்தைத் தொடர முடியும்.

சுங்கக் கட்டணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் 50-க்கும் அதிகமான நகரங்களில் 140-க்கும் அதிகமான வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் கனரக சரக்கு வாகனங்களுக்கான நிறுத்துமிட கட்டணமும் ஃபாஸ்டேக் மூலமாக வசூலிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com