மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட மணீஷ் சிசோடியா: என்ன காரணம்?
கலால் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.


சிறையில் அடைக்கப்பட்ட தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு இன்று காலை 11 மணியளவில் அழைத்து வரப்பட்டார்.
சிசோடியாவுக்கு எலும்பியல் பிரச்சனைகள் இருந்தன, அதற்காக அவர் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...