பனிமூட்டத்தால் காஸியாபாத்தில் நடந்த அவலம்

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், அடர் பனிமூட்டம் காரணமாக, சாலையில் கார் மோதி இறந்தவரின் உடல் மீது நூற்றுக்கணக்கான கார்கள் ஏறி இறங்கிய அவலும் நடந்தேறியிருக்கிறது.
பனிமூட்டத்தால் காஸியாபாத்தில் நடந்த அவலம்


உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், அடர் பனிமூட்டம் காரணமாக, சாலையில் கார் மோதி இறந்தவரின் உடல் மீது நூற்றுக்கணக்கான கார்கள் ஏறி இறங்கிய அவலும் நடந்தேறியிருக்கிறது.

சாலையில் அடிபட்டு இறந்தவரின் உடல் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற காவல்துறையினர், சாலையிலிருந்த உடலைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், அந்த உடல் மிகவும் சிதைந்து, ஆணா? பெண்ணா?யார் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு சின்னாபின்னமாகியிருந்தது. கைவிரல்கள் கூட, கையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்கள்.

விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பலியான நபரை அடையாளம் காணும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

திங்கள்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையில் ரத்தம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்த சில வாகன ஓட்டிகள் காலை 10 மணிக்குத்தான் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

காவல்துறையினர், உடலின் சில பாகங்களையும், எலும்புத் துண்டுகள், சில விரல்கள், கிழித்த துண்டு ஆடை, ரத்தக் கறையை சேகரித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர் ஆணா பெண்ணா என்று கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கிறது என்று காவல்துறையினர் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com