ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார் அசோக் தன்வார்!

ஹரியாணாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார் அக்கட்சியில் இருந்து விலகினார்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார் அசோக் தன்வார்!

ஹரியாணாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார் அக்கட்சியில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அசோக் தன்வார் வியாழக்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தற்போதைய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் நீங்கள் இணைந்துள்ளது எனது கொள்கைக்கு எதிரானது. எனவே என்னால் ஹரியாணா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக செயல்பட முடியாது.

அதனால் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்யும் முடிவைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக நான் எப்போதும் நமது அரசியலமைப்பை நம்பி மதித்து வந்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். பாரத மக்கள் மற்றும் ஹரியாணா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அசோக் தன்வார் கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் இவர் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com