அருணாசலில் ராகுல் உரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ராகுலின் நியாய யாத்திரை நடைபெறும் அருணாசலப் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடு விரிவுபடுத்தியுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுலின் நியாய யாத்திரை நடைபெறும் அருணாசலப் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடு விரிவுபடுத்தியுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். 

அசாமின் லக்கிம்பூரிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் பாபும் பரே மாவட்டத்தில் உள்ள தோய்முக்கிற்கு கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இன்று தி மதியம் 2 மணியளவில் எஸ்டிஓ மைதானத்தில் பொதுமக்களுடன் உரையாடுகிறார். 

மாநில தலைநகருக்குள் வரும் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாபும் பரே  காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

கம்டோ செக் கேட் முதல் டோய்முக்கில் உள்ள எஸ்டிஓ மைதானம் வரை பாதை சீர்செய்யப்பட்டுள்ளதாகவும், ராகுல் நின்று பொதுமக்களிடம் உரையாற்றும் பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மாநில தலைநகரின் முக்கிய இடங்களில் வண்ணமயமான காங்கிரஸ் பதாகைகள் மற்றும் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com