மணிப்பூர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் நடந்துவரும் வேலை நிறுத்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மணிப்பூர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இம்பால்: 23 வயது தன்னார்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒருங்கிணைந்த போராட்ட குழு அறிவித்த 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் உள்ளூர் குடிமக்கள் அமைப்புகள் இணைந்த கூட்டு நடவடிக்கை குழு அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் இளைஞர், இரு குழுக்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜன.17 அன்று பலியானார்.

வேலை நிறுத்தத்தால் சந்தை மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது வாகன சேவைகள் இயங்கவில்லை.

இதுவரை விரும்பத்தகாத நிகழ்வு எதுவும் பதிவாகவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மலை மாவட்டங்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவில்லை.

“முதல்வர் பைரன் சிங்குக்கு இந்த விவகாரம் குறித்த அறிக்கையை அனுப்பியுள்ளோம். அரசிடம் இருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை” என கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com