ஜம்முவில் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை மேலும் நீட்டிப்பு

ஜம்மு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஜம்மு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடும் குளிரைக் கருத்தில் கொண்டும், ஜம்மு கோட்டத்தின் கோடை மண்டலங்களில் செயல்படும் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 22 முதல் ஜனவரி 27 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக ஜம்மு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

அதேசமயம், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒத்திகைக்கு வர வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தின விழாவில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com