கண்களைச் சிமிட்டி புன்னகைக்கும் ராமர்! வைரல் விடியோ!!

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் கண்களை சிமிட்டிப் பார்ப்பதைப் போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
கண்களைச் சிமிட்டி புன்னகைக்கும் ராமர்! வைரல் விடியோ!!

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் கண்களைச் சிமிட்டிப் பார்ப்பதைப் போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

அயோத்தி கோயில் மூலவரான ஸ்ரீ பால ராமர் கண்களைச் சிமிட்டி புன்னகைப்பதைப் போன்றும், சிரித்தபடி தலையைத் திருப்பி பார்ப்பதைப் போன்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவைப் பலரும் வியப்புடன் பார்த்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த தலைவர்கள் பேசுவதைப் போன்ற விடியோக்களும், நடிகைகளில் மார்ஃபிங் விடியோக்களும் சமூக வலைதளத்தில் வலம் வந்தன. 

தற்போது அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர்  சிலை கண்களை சிமிட்டிப் பார்ப்பதைப் போன்று விடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 

அதில், குழந்தை முகத்துடன் இருக்கும் ராமர் சிலை புன்னகை புரிவதைப்போன்றும் முகத்தைத் திருப்பி அங்குமிங்கும் பார்ப்பதைப் போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த விடியோவை பக்தர்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அயோத்தியில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமர் சிலை, மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியது. இதனை வடிவமைக்க மைசூருவிலுள்ள பழமையான பாறை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com