சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காய்ச்சல் வருமென உணர்கிறேன்: கார் விபத்து குறித்து மம்தா பானர்ஜி! 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கார் விபத்து குறித்து பேசியுள்ளார். 

News image
படம்: ஏஎன்ஐ | எக்ஸ்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பர்த்மானில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அங்கு மக்களை சந்தித்து பேசியப்பிறகு கொல்கத்தாவுக்கு சாலை வழியாகத் திரும்பும் போது, அவரது கார் விபத்தில் சிக்கியது. 

Story image

இதில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டரில் திரும்பவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மம்தா பானர்ஜியின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.  

இந்நிலையில் விபத்து குறித்து மம்தா பானர்ஜி, “எனக்கு காய்ச்சல் வருமென உணர்கிறேன். குளிராகவும் இருக்கிறது. எனது காருக்கு முன்பாக வேகமாக ஒரு வாகனம் வந்தது. அது மிகவும் வேகமாக வந்தது. ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி தப்பித்தேன். இதனால் நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதன் வேலைகளை பார்க்கிறது. நான் மருத்துவமனைக்கு செல்லமாட்டேன். குளிராக இருப்பதால் வீட்டிற்கு செல்கிறேன்” எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.