காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்குப் பின் கைது செய்யப்படுவார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். ராகுல் காந்தி மீதும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீதும் மக்களைத் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டி அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை அஸ்ஸாமில் உள்ள கல்லூரி ஒன்றில் உரையாற்ற ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட அனுமதி, திடீரென மறுக்கப்பட்டது. குவஹாட்டி பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் சாலைத் தடுப்புகளை உடைக்கும் காணொலி வலைதளங்களில் வலம் வந்தது.
இதையும் படிக்க: பட்ஜெட் உரையை கட்-ஷாட் செய்த கேரள ஆளுநர்: 1.8 நிமிடத்தில்..
காங்கிரஸ் நடைபயணத்திற்கு தொடர் தொந்தரவுகளும், பாதுகாப்பு பிரச்னைகளும் உருவாவதாகவும், காவல்துறையினர் வேடிக்கை பார்க்காமல், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி பிரசாரம் செய்யும் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றியடையும் என அஸ்ஸாம் முதல்வர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

