சிஏஜி நியமன முறைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தற்போதைய சிஏஜி நியமன முறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தற்போதைய சிஏஜி நியமன முறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளரை நியமனம் செய்யும் வழிமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அனுபம் குல்ஸ்ரேஷ்தா என்பவர் இந்தப் பொதுநல மனுவை தொடர்ந்துள்ளார். பொதுநல மனுவிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தற்போதைய சிஏஜி நியமன முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறியது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மத்திய நிதியமைச்சகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகத்துக்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமையிலான அமைச்சரவைச் செயலகம் பிரதமரின் ஒப்புதலுக்காக ஒரு பட்டியலை அனுப்புகிறது .

பிரதமர் அந்தப் பட்டியலில் உள்ள நபர்களில் இருந்து யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்கிறார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து சிஏஜி நியமனம் செய்யப்படுகிறார்.

இந்த நியமன முறையை இன்னும் வெளிப்படையாகச் செய்ய உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com