ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொம்மை போல செயல்படுகிறார் பிரதமர் மோடி: கார்கே விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவை போல செயல்பட்டு வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

News image
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
Updated On :26 ஜனவரி 2024, 9:28 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவை போல செயல்பட்டு வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவை போல பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இணைந்து அரசியலமைப்பை சிதைக்க சதி செய்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 

குடியரசு தினத்தை முன்னிட்டு, கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (ஜன.26) தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அரசியலமைப்பு இல்லையென்றால் ஜனநாயகத்தை நம்மால் காப்பாற்ற முடியாது. கடின முயற்சியால், நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களும், அரசியலமைப்பு சபை உறுப்பினர்களும் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பை வழங்கினர். 

இந்திய அரசியலமைப்பை சிதைத்து, அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சதி செய்து வருகின்றன. நமது சுயாட்சி அமைப்புகளை ஒவ்வொன்றாக அழிப்பதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பொம்மையாக நடந்து கொள்கிறார். பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை நீதித்துறை மற்றும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.