புது தில்லி: தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அரவிந்த கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் ஆளுக்கு தலா ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த கேஜரிவால் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், 21 எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும் ரூ.25 கோடி வரை அவர்கள் கட்சியிலிருந்து விலகத் தருவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களும் பாஜகவின் கோரிக்கையை மறுத்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக தில்லியில் தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் அவையெல்லாம் தோல்வியில் முடிவதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மதுபான வழக்கில் தன்னை கைதுசெய்யும் திட்டமும் இந்த முயற்சியின் பகுதிதான் என அவர் சுட்டியுள்ளார்/
இதனை மறுத்த தில்லி பாஜக செயலர் ஹரிஸ் குரானா, ஆம் ஆத்மி யாரிடமெல்லாம் பேரம் பேசப்பட்டது என்பதையும் யார் பாஜகவில் இருந்து பேசினார்கள் என்கிற விபரத்தையும் வெளியிடுமாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!
மேலும், அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை விசாரணையின் மீதான கவனத்தைத் திசை திருப்ப முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரானால் அச்சுறுத்தல் இல்லை! போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமா

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி ஸ்டில்ஸ்

திருமண மண்டபங்கள், தனியாா் நிதி நிறுவனங்கள், அச்சக உரிமையாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

