சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை  முறைகேடு வழக்கில்   முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை  முறைகேடு வழக்கில்  முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வா் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நில அபகரிப்பு மோசடியின் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சாா்பில் பல முறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை எதிா்த்து முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னா் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தையும் ஹேமந்த் சோரன் நாடினாா். ‘தன் மீது பொய்யான குற்றச்சட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அமலாக்கத்துறை அழைப்பாணையை ரத்து செய்யவேண்டும்’ எனக் கோரினாா். ஆனால், இரு நீதிமன்றங்களும் அவருடைய கோரிக்கையை தள்ளுபடி செய்தன.

இந்தச் சூழலில், ஹேமந்த் சோரனுக்கு கடிதத்துடன் கூடிய புதிய அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. அவர் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இம்மாத இறுதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கெனவே அழைப்பாணைஅனுப்பியிருந்த நிலையில்  முதல்வர் ஹேமந்த் சோரன் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி ராஞ்சியில் உள்ள முதல்வர் சோரன் இல்லத்துக்கு நேரில் சென்ற அதிகாரிகள் அவரிடம் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். 

இதுவரை இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com