சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் சூரிய சப்தமி விழாவைக் கடைபிடிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

ராஜஸ்தான் மாநில அரசு, பிப்.15 அன்று சூரிய சப்தமி நாளை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கடைபிடிக்க அறிவுறித்தியுள்ளது.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மதன் திலாவரின் வழிகாட்டுதல்படி துறை இயக்குநர் ஆசிஷ் மோடி, அனைத்து பள்ளிகளிலும் காலை கூட்டங்களில் சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிப்.15 மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராமத்தவர்கள் அனைவரும் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஒருநாள் நிகழ்வு மட்டும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அரசு அனுமதி அளித்தால் உடல் நலனை சீராக்கும் சூரிய நமஸ்காரத்தை ஊக்குவிக்க தொடர்ச்சியான பயிற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

முறையான பயிற்றுநர்கள் கொண்டு பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்யும் முறைகளைக் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com