நிதீஷ் குமாரின் செயல் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல: அரவிந்த் கேஜரிவால்

அடிக்கடி அணி மாறும் நிதீஷ் குமாரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நிதீஷ் குமாரின் செயல் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல: அரவிந்த் கேஜரிவால்
Published on
Updated on
1 min read

அடிக்கடி அணி மாறும் நிதீஷ் குமாரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) காலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ், மாலையில் பாஜக ஆதரவுடன் பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகிய இருவரும் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.

நிதீஷ் குமாரின் இச்செயலைக் குறிப்பிட்டு திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், “நிதீஷ் குமார் செய்தது மிகவும் தவறானது. அவர் இந்தியா கூட்டணியை விட்டுப் போயிருக்கக் கூடாது. 

அடிக்கடி அணிமாறும் நிதீஷ் குமாரின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.” என்று தெரிவித்தார். 

2014 வரை பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து முதலமைச்சரானார். அந்தப் பதவிக்காலம் முடியும் முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவியை தொடர்ந்தார்.

அதேபோல, 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக உடன் சேர்ந்து வென்ற நிதீஷ் குமார், தேர்தலுக்குப் பின்பு அக்கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தற்போது மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com